கும்மிடிப்பூண்டி:உலக சாதனைக்காக, காந்தி உலக மையம் சார்பில், இன்று சென்னை மெரீனா கடற்கரையில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், காந்தி வேடம் அணிந்து ஊர்வலமாக செல்ல உள்ளனர்.அதற்காக நேற்று, 40 நிமிடத்தில், 1,015 குழந்தைகளுக்கு மொட்டை அடித்து புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், காந்தி உலக மையம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. மகாத்மா காந்தியின் நினைவு பொருட்கள் மூலமாக, அவரது உயரிய கருத்துகளை மாணவர்களிடமும், இன்றைய சமுதாயத்தினரிடமும் கொண்டு செல்வதே, அந்த அமைப்பினரின் நோக்கம்.காந்தியின், 65வது நினைவு நாளான இன்று, உலக சாதனைக்காக, 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, மொட்டை அடித்து காந்தி வேடமிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், ஊர்வலமாக செல்ல உள்ளனர்.
அதற்காக மொட்டை அடிக்கும் நிகழ்வு, கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் நேற்று நடந்தது. ஆர்வத்துடன் பங்கேற்ற, 1,015 மாணவ, மாணவியருக்கு, 138 பேர்களை கொண்டு, 40 நிமிடத்தில் மொட்டை அடிக்கப்பட்டது.இதன் மூலம், புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியா மற்றும் தமிழக சாதனைக்கான சான்றிதழ்களை, அமைப்பின் நிறுவனர் ராஜேஷிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் நிகழ்வின் பதிவு, கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.