சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் செயல்பட்டு வரும், கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்திற்கு, அலுவல் சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில்
இல்லாமல், இரண்டு லட்சம் கிராம கோவில்கள் உள்ளன. இவற்றை, அந்தந்த கோவில் பூசாரிகளே பராமரித்து வருகின்றனர். இதற்காக, கிராம கோவில் பூசாரிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அமைச்சரை தலைவராகவும், நிதித் துறை, சமூகநலத் துறை, வருவாய்துறை, தொழில் துறை, நில நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் அரசு செயலர்களை, அலுவல் சார் உறுப்பினர்களாக கொண்டு, கிராம கோவில் பூசாரிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கான, அலுவல் சாராத உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நல வாரிய உறுப்பினர்களாக, சென்னை - புண்ணியகோடி, விழுப்புரம் - பழனி, திருச்சி - குழந்தைவேலு, மதுரை - கிருஷ்ணபட்டர், சிவகங்கை - சண்முகசுந்தரம், திருநெல்வேலி - வீரபத்திரன், கோவை- மாணிக்கம், சேலம் - முருகேசன், தஞ்சாவூர் - ராமையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.