சென்னை: சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 3,200 பள்ளிகளில், 80 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்தி குறிப்பு: ஓசூர், தர்மபுரி, கோவை, நீலகிரி வடக்கு, கூடலூர், ஈரோடு, சத்தியமங்கலம், திண்டுக்கல், கொடைக்கானல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில், யானைகள் மற்றும் விலங்குகள் நடமாட்டத்தால், மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.
அகழி அமைப்பு : இதை தடுக்க, யானை தடுப்பு அகழிகள் அமைப்பு மற்றும் பராமரித்தல், விலங்குகள் வசதிக்கும் பகுதிகளில், தடுப்பு அணைகள் மூலம், அதிகளவு தண்ணீர் சேமித்தல், சூரிய மின் ஒளியுடன் கூடிய வேலிகள் அமைத்தல், விலங்குகள் விரும்பி உண்ணும் பயிர்களை வளர்த்தல் போன்ற பல பணிகளை மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். நடப்பாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 100 பள்ளிகள் வீதம், 32 மாவட்டங்களில், 3,200 பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நீர், மண் மற்றும் காற்று ஆகியவையை பாதிக்கக்கூடிய சூழல் விவரங்களை அறிய, 1,000 பள்ளிகளுக்கு, நீர் மற்றும் மண் ஆய்வக பரிசோதனை கருவிகள் வாங்க, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்கா : சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும். இதில், இயற்கை சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம், வன உயிரின தடய அறிவியல் ஆய்வு கூடம், தாவரங்கள் மற்றும் இறைச்சி உண்ணும் விலங்குகள் குறித்த, பெரிய அளவில் கள ஆராய்ச்சி மையங்கள், 27 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இதில், இரண்டு விஞ்ஞானிகள், நான்கு இளநிலை ஆராய்ச்சியாளர்கள், இரண்டு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் என, எட்டு பணியிடங்கள் உருவாக்கப்படும்.
வண்ணத்துப்பூச்சி பூங்கா : ஸ்ரீரங்கத்தில், வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திரவனம், 10 எக்டேரில், 4.45 கோடி ரூபாயில் அமைக்கப்படும். வன ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு, ஒரு ஜோடி காலணி, டார்ச் லைட், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ரெயின் கோட் ஆகியவை வழங்க, 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.