சிவகாசி: பள்ளி மாணவிகளிடம், தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்தது தொடர்பாக, இரு ஆண்டுகளுக்குப் பின், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 2011 ல், தலைமைஆசிரியராக பணியாற்றியவர் தனசேகரன். அப்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். பெற்றோர் புகாரை தொடர்ந்து, 2011 ஆக., 15 ல், தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு அறையை பூட்டினர். போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியரை மீட்டுச் சென்றனர். தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
"சஸ்பெண்ட்' ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க முயற்சி செய்தார். மகளிர் சங்கத்தினர் போராடி, பதவியேற்க விடாமல் தடுத்தனர். இப்பிரச்னை குறித்து, கல்வி துறைக்கு புகார் செய்தனர்.
இரு ஆண்டுகளுக்கு பின், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாதித்த மாணவிகள் 3 பேர், பெற்றோர், புகார் செய்த மாதர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமியிடம், நேற்று, கல்வி துறை இணை இயக்குனர் லதா விசாரணை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.