காரைக்குடி: ""அரசின் இலவச கறவை மாடுகள் திட்டம் மூலம், தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் கூடுதலாக உற்பத்தியாகிறது,'' என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன் பேசினார்.
காரைக்குடியில் நடந்த, கால்நடை வளர்ப்பு குறித்த கருத்தரங்கில், அவர் பேசியதாவது: கால்நடை வளர்ப்பு, இந்தியாவில் அதிகரித்துள்ளது. பருவமழை குறைவால், போதிய விளைச்சல் இன்றி, கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள், இதை துணைத் தொழிலாக மேற்கொள்ளவேண்டும். கால்நடை வளர்ப்பு மூலம், ஆறே மாதங்களில் வருவாய் கிடைக்கும். அறிவியல் தொழில்நுட்பம் மூலம், கால்நடைகளுக்கு பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. தீவனச் செலவும் குறைந்துள்ளது. நீலநாக்கு நோய்க்கு, தடுப்பு மருந்து போன்றவை, தமிழகத்தில் தான் முதன்முதலாக கண்டறியப்பட்டன. சினை கருவூட்டல் தொழில்நுட்பம் மூலம், மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கோழிக்கு தடுப்பூசி போட, மருத்துவமனைக்கு அலையும், நிலைக்கு பதிலாக, மாத்திரைகள் கண்டுபிடித்துள்ளோம். மேலும், 7.2 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்து, இந்தியாவிலேயே எட்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. அரசின் இலவச கறவை மாடுகள் மூலம், நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாராமன், அழகப்பா பல்கலை துணைவேந்தர் சேதுசுடலைமுத்து, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சரவணபவா, குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.