விரைவில் கூட்டுறவு தேர்தல் அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கூட்டுறவு சங்கங்களுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளதால், மூன்றடுக்கு கூட்டுறவு தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆணையர் நியமனம் : கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு, செயலர் மட்டுமே உள்ள நிலையில், ஆணையரை நியமிக்க, அரசு, முதல் உத்தரவை வெளியிட உள்ளது. அரசு செயலர் அந்தஸ்தில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, ஆணையராக நியமிக்கப்பட உள்ளார். ஆணையர் நியமிக்கப்பட்டதும், மூன்றடுக்கு கூட்டுறவு தேர்தலுக்கான அறிவிப்பை அரசு வெளியிடவுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 25 ஆயிரத்து 529 கூட்டுறவு சங்கங்களில், ஏறக்குறைய அனைத்து சங்கங்களிலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. கிராமங்களில் உள்ள பிரதம கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகளை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். இது, முதல்கட்ட தேர்தல். இச்சங்கங்களின் பிரதிநிதிகள், வட்டங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகளை தேர்வு செய்வர். இது, இரண்டாவது கட்டத் தேர்தல். மாவட்ட நிர்வாகிகள் மூலம், மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் தேர்வு செய்வது மூன்றாவது கட்டத் தேர்தல்.
தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டதும் ,இம்மூன்று கட்டத் தேர்தல்கள்அறிவிக்கப்படும். கோர்ட் வழக்கு தீர்ப்பு முழுமையாகக் கிடைக்க, ஒருவார காலமாகலாம். இதன்பின், படிப்படியாக அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்தல் நடத்த கெடு : அரசியல் அமைப்புச் சட்டம், 97ல் திருத்தம் கொண்டுவந்துள்ள மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது போல, கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. 2013 பிப்., 25ம் தேதிக்குள், கூட்டுறவு சங்கங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு இருக்க வேண்டும் எனவும் கெடுவிதித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்ட திருத்தம் மூலம் ஏற்பட்டுள்ள கட்டாய தேர்தல் என்பதால், விரைவில் கூட்டுறவு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், ஐகோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, தேர்தலுக்கு மீண்டும் தடை பெற வாய்ப்பு அளிக்காமல், கூட்டுறவு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் என்றும், கூட்டுறவு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய சங்கங்கள் எவை ? : தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி நெசவாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், தொழிலாளர் கூட்டுறவு கடன் சிக்கன சங்கங்கள் போன்றவை, கிராம அளவில் முக்கிய சுங்கங்கள் ஆகும். நிலவள வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், நுகர்வோர் பண்டக சாலைகள், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு சங்கங்களின் இணையம், பால் கூட்டுறவு இணையம், மாநில கூட்டுறவு தலைமை வங்கி போன்றவை நகர அளவில் முக்கிய சுங்கங்களாக கருதப்படுகின்றன.

- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்