ரூ. 1,740 கோடியில், 6,254 வாடகை குடியிருப்புகள் : சென்னையில் அமைக்க உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: சென்னையில், 17 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, 1,740 கோடி ரூபாயில், 6,254 வாடகை குடியிருப்புகள் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திகுறிப்பு: சென்னையில், அரசு ஊழியர்களுக்கு, பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி, தாடண்டர் நகர் உள்ளிட்ட, 17 இடங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இந்த வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இவற்றை பழுது பார்க்க, அதிக செலவாகும் என்பதால், அதே இடத்தில் உள்ள, 2,238 பழைய வாடகை குடியிருப்புகளை இடித்து, அதிக தரப்பரப்பு குறியீட்டுடன், புதிய குடியிருப்புகள் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையில், அரசு ஊழியர்களுக்காக வாடகை குடியிருப்புகள் மற்றும் பொது மக்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும். முதல்கட்டமாக, அரசு ஊழியர்களுக்கு, 2,522 வாடகை குடியிருப்புகளும், பொதுமக்களுக்கு, 1,770 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும். இரண்டாவது கட்டமாக, அரசு ஊழியர்களுக்கு, 1,124 வாடகை குடியிருப்புகளும், பொதுமக்களுக்கு, 838 குடியிருப்புகள் கட்டப்படும்.
இத்திட்டத்தில், மொத்தம், 6,254 குடியிருப்புகள், 1,740 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். கட்டுபாடற்ற நகர்புற வளர்ச்சியை முறைபடுத்த, திட்டமில்லா பகுதி முழுவதற்கும், முழுமையான திட்டங்கள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். இவற்றை, பல்கலைகழகங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்கட்டமாக, 8,447 சதுர கி.மீ., உள்ளடக்கிய, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய கூட்டு உள்ளூர் திட்ட குழுமங்களின் திட்டப்பகுதிகளில், 4.91 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில் நுட்ப உதவியுடன், பாரதிதாசன் பல்கலை கழகம் வாயிலாக, முழுமை திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் உள்ளூர் திட்ட பணிகள், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி பகுதி மற்றும் செங்கல்பட்டு மண்டலம், சென்னையில் உள்ள நகர் ஊரமைப்பு ஆணையரகம் ஆகிய அலுவலகங்களில், இணையதளம் மூலம் கட்டட வரைபடங்கள் சரிபார்க்கும் திட்டம் அமலாகிறது. இத்திட்டத்திற்கு, 2.20 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில், சிறப்பு பராமரிப்பு பணிகளை, 10 கோடி ரூபாயில் மேற்கொள்ளவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்