சென்னை: "பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, உரிய பயிற்சி அளிக்க, சிவகாசியில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திகுறிப்பு: மாநிலத்தில் உள்ள, 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 58 நிலையங்கள், 40 ஆண்டுகள் பழமையானது. இவற்றை, படிப்படியாக புனரமைத்து, நவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்கப்படும்.
முதல்கட்டமாக, 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், கட்டட பராமரிப்பு மற்றும் நவீன கருவிகள் வாங்க, 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், கிண்டி, அம்பத்தூர் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களையும், புனரமைத்து, நவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க, நடமாடும் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்படும். பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, உரிய பயிற்சி வழங்க, சிவகாசியில் பயிற்சி மையம் ஒன்று ஏற்படுத்தப்படும். பட்டாசு தொழிற்சாலைகளில், பணிபுரியும் மேற்பார்வையாளர், பணி பார்வையாளர் மற்றும் தொழிலாளர் ஆகியோருக்கு தொழில் வழி பாதுகாப்பு முறைகள், சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடந்த, நிரந்தர பயிற்சி மையம் அமைக்கப்படும். இந்த மையத்திற்கு, தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் உட்பட எட்டு பணியிடங்களும், சொந்த கட்டடமும் ஏற்படுத்தப்படும். இப்பணிகளுக்கு, 2 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.