bank staff union plan to participate strike | பிப்., 20, 21ல் வேலை நிறுத்தம் பங்கேற்க வங்கி ஊழியர் சங்கம் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிப்., 20, 21ல் வேலை நிறுத்தம் பங்கேற்க வங்கி ஊழியர் சங்கம் முடிவு

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், புதிய பென்ஷன் திட்டத்தை திருத்தி அமைப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 20, 21ல், இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க, வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் மனோகரன் கூறியதாவது: தேசிமயமாக்கப்பட்ட வங்கிகளில், பொதுமக்களின் டிபாசிட் தொகையாக இருந்த, 70 ஆயிரம் கோடி ரூபாய், கிராமப்புற வங்கி சேவையை விரிவுபடுத்துவதாக கூறி, தனியாரிடம் (ஞதண்டிணஞுண்ண் ஞிணிணூணூஞுண்ணீணிணஞீஞுணt) ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மக்களின் டிபாசிட் தொகையை வீணடிப்பதை அரசு நிறுத்த வேண்டும். மொத்த கடன் தொகையில், நான்கு சதவீதம், விவசாயம் சார்ந்த பணிக்கு கடனாக வழங்க வேண்டும்; நகைக்கடன் என்ற பெயரில் விவசாயிகள் தவிர மற்றவர்களுக்கு அக்கடன் செல்கிறது. இந்தியா முழுவதும், வங்கிகளில், 60 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன; அவற்றை உடனே நிரப்ப வேண்டும்.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஒவ்வாத செயல் செய்வதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 20, 21ல் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் உள்ளிட்டவை பங்கேற்கின்றன.
இவ்வேலைநிறுத்தத்தில், தமிழகத்தில், ஐம்பது ஆயிரம் வங்கி பணியாளர்களும், இந்தியா முழுவதும் ஆறு லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். வங்கி சார்ந்த மேலும் ஏழு சங்கங்கள் போராட்டத்தில் இணைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை