மதுரை: கடந்தாண்டு மதுரை சிந்தாமணியில் ரிங்ரோட்டில் தேவர்ஜெயந்தி விழாவில் பங்கேற்று திரும்பியவர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில், சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. இச்சம்பவத்தில் ஆறு பேர் பலியாயினர். இதில் ஈடுபட்டதாக அவனியாபுரம் போலீசாரால் கைதான ராமர், மோகன், விக்னேஷ், முத்துவிஜி, மணி, கார்த்திக் ஆகியோர் சேலம், சந்திரசேகரன், நாகராஜ், முத்துகணேஷ் உட்பட 4 பேர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அடையாள அணிவகுப்புக்காக அவர்கள் நேற்று மதுரை சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். மாஜிஸ்திரேட் இளையராணி முன்னிலையில் அவர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு சாட்சிகள் ஐந்து பேர், அவர்களை அடையாளம் காட்ட, அணிவகுப்பு நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.