தேவாரம்: உற்பத்தி குறைந்து, புது வரத்து ஏலக்காய் சிறிய ரகமாக இருப்பதால், இருப்பு ஏலக்காய் கிலோவிற்கு 100 ரூபாய் கூடுதலாக விற்பனையாகிறது. கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. பகலில் கடும் வெப்பமும், இரவில் அதிக பனிப் பொழிவும் இருப்பதால், ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய ரகம் உற்பத்தி குறைந்து, சிறிய ரகம் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஏல மையங்களில், சீசன் நேரத்தில் 5 லட்சம் கிலோவாக இருந்த பதிவு, உற்பத்தி குறைவால் 3 லட்சம் கிலோவாக சரிந்துள்ளது.
பெரிய ஏலக்காய் வரத்து குறைந்ததால், சராசரி ரகம் ஒரு கிலோ 750 ரூபாய் முதல் 800 ரூபாயாக உள்ளது. இரண்டாவது, மூன்றாவது முறை எடுப்பு, இருப்பு ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. இருப்பு ரகம் சராசரி கிலோ 850 முதல் 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 7.5 எம்.எம்., "கிரீன் கோல்டு' ரகம் ஒரு கிலோ 980 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மொத்த வியாபாரிகள் கூறுகையில், "ஏற்றுமதி "ஆர்டர்' இருப்பதால் ஏலக்காய்க்கு நிலையான விலை கிடைக்கிறது. புதுக்காய் சிறிய ரகமாக இருப்பதால், இருப்பு காய்கள் விரும்பி வாங்கப்படுகின்றன. மழையில்லாததால் விலை குறைய வாய்ப்பில்லை,'' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.