Advertisement
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்குஎச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,00:50 IST

காஞ்சிபுரம்: "தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தற்போதே துவக்கி விட்டனர். மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. இது குறித்து பொதுமக்கள், முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். அதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர், அனைத்து மாவட்டத்திலும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திற்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், மாவட்டத்தில் செயல்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை, வரும் மே மாதம், துவக்கப்பட வேண்டும். அதற்கு முன், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என, அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து, அனைத்து பள்ளிகளுக்கும், மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
30-ஜன-201308:25:38 IST Report Abuse
samuelmuthiahraj metriculation பள்ளிகளை ஒன்றும் செய்ய மாட்டார்கள் பேப்பர் அளவில் தான் ஆணை இருக்கும் செயல் முறையில் அவர்கள் என்ன ninaikkiraarkalo அதைத்தான் செய்வார்கள் ஒன்பதாம் வகுப்பிலே பத்தாம் வகுப்பு பாடம் கற்பிப்பதையும் பதினொன்றாம் வகுப்பிலே பனிரெண்டாம் வகுப்பு பாடம் நடப்பிப்பதையும் சுற்று சுவர் இல்லாமலும் விளையாட்டு மைதானம் இல்லாமலும் இருப்பதையெல்லாம் கண்டுகொள்ளாது இருப்பது போல் இதையும் விட்டுவிடுவார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.