சென்னை: தூத்துக்குடியில் காணாமல் போன பள்ளி மாணவர்கள், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், காரப்பேட்டையை சேர்ந்த, வெங்கடேஷ்பிரபு, 14, செல்வகுமார், 13, ஆகிய இருவரும், 9ம்வகுப்பு படித்து வருகின்றனர். தேர்வுக்கு படிக்காததால், மதிப்பெண் குறைந்துவிடும் என, நினைத்து, பெற்றோருக்கு பயந்து, நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்துள்ளனர். அங்கிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, நேற்று காலை, சென்னை எழும்பூர் வந்தனர். எங்கு செல்வது என, தெரியாமல் தயங்கி நின்றிருந்த இருவரையும், ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில், தூத்துக்குடியிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் ஓடிவந்தது தெரியவந்தது. உடனடியாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துவிட்டு ,இருவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களின் பெற்றோர் சென்னை வந்ததும், அவர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.