மதுரை: "அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் கற்பித்தல் உபகரணங்கள் வாங்குவதற்கு, கர்நாடகா நிறுவனத்துக்கு அனுப்பி, திரும்பி வந்த, 2,000 ரூபாய் நிதியை, பள்ளி பராமரிப்புக்கே பயன்படுத்தலாம்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் செயல்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 7,500 ரூபாயும், வளர்ச்சி நிதியாக 8,000 ரூபாயும், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ளப்படும். சில அதிகாரிகள் உத்தரவால், கற்றல் கற்பித்தல் உபகரணம் வாங்க, 2012-2013 கல்வியாண்டு நிதியில், கர்நாடகாவில் உள்ள, "லியோ லிட்டரேச்சர் அண்டு சில்ரன் மெட்டீரியல்ஸ் பேங்க்' என்ற நிறுவனத்திற்கு, 35 ஆயிரம் பள்ளிகள் சார்பில், தலா, 2,000 ரூபாய்க்கான, "டிடி'க்கள் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கு தலைமையாசிரியர், கிராமக் கல்வி குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அந்த, "டிடி'க்கள் தமிழகத்திற்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த, 2000 ரூபாய் நிதி, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் வங்கி கணக்குகளில், "டெபாசிட்' செய்யப்பட்ட நிலையில், நான்கு மாதங்களாக எந்த பணிக்கு, அந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் இல்லை. இந்நிலையில், அந்த நிதியை, பள்ளி பராமரிப்பு பணிகளுக்கே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து, தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "இந்த நிதியை, நான்கு மாதங்களாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது, பள்ளி பராமரிப்புக்கே பயன்படுத்தலாம் என, அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.