சென்னை: தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து, ஏமாந்தவர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் ஐயப்பா நகர், மூன்றாவது சாலையில், "ப்ளு ஸ்கை புரமோட்டர்ஸ் இந்தியா' என்ற நிறுவனத்தை சாலமன் என்பவர் நடத்தி வந்தார். வைப்பு தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதுடன், 12 மாதத்தில் அந்த தொகையை திருப்பிக்கொடுப்பதாகவும், மக்களை கவரும் வகையில் விளம்பரம் செய்து, பல லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். அந்த தொகையை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டுவதாகவும் கூறி, ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில், பொருளாதார குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சாலமனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, அதை திரும்ப பெறாதவர்கள், "48, இரண்டாம் அவென்யு, அண்ணாநகர், öசுன்னை' என்ற முகவரியில், பொருளாதார குற்றப் பிரிவு கண்காணிப்பாளரை அணுகி, புகார் கொடுக்கலாம்.
கூடுதல் தகவல் பெற, பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளரை, 98407 22173 என்ற அலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.