Advertisement
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி காரில் கறுப்பு நிற, "ஸ்டிக்கர்' : நடிகர் விவேக், மருத்துவர் உட்பட 100 பேருக்கு அபராதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
00:54

சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, காரில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு நிற, "சன் பிலிம் ஸ்டிக்கர்'களை, போக்குவரத்து போலீசார், நேற்று அதிரடியாக கிழித்து எறிந்தனர். இதில், நடிகர் விவேக், மருத்துவர் ஒருவர் உட்பட, 100 பேரிடம், அபராதம் வசூலிக்கப்பட்டன. கார் கண்ணாடிகளில் கறுப்பு நிற, "சன் பிலிம் ஸ்டிக்கர்' ஒட்டப்படுவதால், காருக்கு உள்ளே இருப்பவர்கள் யார் என, தெரிவதில்லை. இதனால், கடத்தல் உட்பட, பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. கார்களில், கறுப்பு நிற ஸ்டிக்கர்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, அனைத்து மாநில, டி.ஜி.பி.,க்களுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை, புறநகர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார், கார்களை மறித்து, கறுப்பு ஸ்டிக்கர்களை கிழித்தனர். முதல்முறை அபராதம் இல்லாமல், வெறும் எச்சரிக்கையுடன், ஸ்டிக்கர்களை அப்புறப்படுத்தினர். இதற்கான செலவை மட்டும், கார் உரிமையாளர்களிடம், போலீசார் பெற்றுக் கொண்டனர்.

கண்டு கொள்ளாத போலீசார் : சில வாரங்கள் தொடர்ந்து, இந்த பணியை மேற்கொண்ட போலீசார், பின், கறுப்பு நிற ஸ்டிக்கர் விவகாரத்தை கண்டு கொள்ளவில்லை. இதனால், கார் உரிமையாளர்கள் மீண்டும், ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டனர். தற்போது இது போன்று, ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகனங்களிடம் அபராதம் வசூலிக்க, போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு வந்துள்ளது. சென்னை, பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் கண்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வன், பரமசிவம், வெங்கடேசன், ஜெயவேல் ஆகியோர் கொண்ட, இரண்டு தனிப்படைகள் ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை விமான நிலையம் எதிரே, பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய இடங்களில், நேற்று சோதனை நடத்தினர்.

போலீசார் கண்டிப்பு : அப்போது, கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த கார்களை மறித்து, ஸ்டிக்கர்களை கிழித்தனர். கார் உரிமையாளர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இந்த சோதனையின் போது, பல கார் உரிமையாளர்கள், வழக்கம் போல தப்பித்துக் கொள்ள, தங்களுக்கு தெரிந்த உயர் அதிகாரிகளை, அலைபேசியில் தொடர்பு கொண்டு, போலீசாரிடம் பேச வைத்தனர். ஆனால், சோதனை வாகனத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி, போலீசார் அபராதத்தை வசூல் செய்தனர்.

"100 ரூபாய் கட்டுறேன்' : சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த, சிகப்பு நிற காரை போலீசார் மறித்தனர். கறுப்பு ஸ்டிக்கரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறிய போது, காரில் இருந்து, நடிகர் விவேக் கீழே இறங்கினார். அவர் போலீசாரிடம் சென்று, "நான் இந்த ஸ்டிக்கர் சம்பந்தமாக, முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்கிறேன்; இதனால், அபராதம் மட்டும் தற்போது கட்டிவிடுகிறேன். ஸ்டிக்கரை கிழிக்க வேண்டாம்' என, கேட்டுக் கொண்டார்.
போலீசாரும், 100 ரூபாய் அபராதம் மட்டும் பெற்று, விரைவில் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பினர்.
சோதனையின் போது, மருத்துவர் ஒருவரின் காரை போலீசார் பிடித்தனர். அவசரமாக அறுவை சிகிச்சைக்கு செல்வதால், அபராதம் மட்டும் செலுத்திவிட்டு, ஸ்டிக்கரை தானே, அப்புறப்படுத்திக் கொள்வதாக கூறிவிட்டு, அவரும் புறப்பட்டார். சில அரசியல்வாதிகளின் கார்களுக்கும், நேற்று கட்டாயமாக, அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, உதவி ஆணையர் கண்ணன் கூறுகையில், ""கார்களில் கறுப்பு நிற ஸ்டிக்கர், கட்டாயமாக அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத வாகனங்களை, தொடர்ந்து கண்காணிப்போம். அபராதம் வசூலித்து, ஸ்டிக்கர்களையும் கிழிப்போம். இந்த நடவடிக்கை தொடரும்,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maxim - Coimbatore,இந்தியா
30-ஜன-201311:30:23 IST Report Abuse
maxim என்னத்த கிளிசின்களோ கடவுளுகே வெளிச்சம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
30-ஜன-201306:33:20 IST Report Abuse
nimmi நடிகர் விவேக் தனது படங்களில் சமுதாய சிந்தனையை தூண்டும் நல்ல கருத்துக்களை சொல்வார். அதில் மலேசிய வழக்கு மன்ற காட்சியும், இன்னொரு படத்தில் தனது தந்தை நாட்டாமைக்கு எதிராக தீர்ப்பு சொல்லும் காட்சியிலும் கைதட்டலை பெற்றார். அப்படிப்பட்டவர் ஏன், இந்த செய்தியில் காணும் சம்பவத்தில் முரண்படுகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தபின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கார்களில் உள்ள கருப்பு பிலிம் அகற்றப்பட்டதாக செய்திகள் படித்தேன். அப்படி இருக்கும்போது, இவர் யாரிடம் பொய் உத்தரவு பெற்றுக்கொள்ள போகிறார். அவர்தான் விளக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.