கொண்டலாம்பட்டி: கொண்டலாம்பட்டியில் ஜோடியாக வலம் வந்த, ஆண், சிறப்பு எஸ்.ஐ., மற்றும் பெண் எஸ்.ஐ., ஆகிய இருவரும், அதிரடியாக ஆயுதப் படைக்கு தூக்கியடிக்கப்பட்டனர். சேலம், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக இருந்தவர், வளர்மதி, 36; திருமணம் ஆகாதவர். அவருடன், சிறப்பு எஸ்.ஐ.,யாகப் பணியாற்றியவர் பூபதி, 40. இவர்கள் இருவரும், இரவு ரோந்து பணியில், ஒரு சேர, ஒரே இடத்துக்குச் சென்று வருவதும், நள்ளிரவுக்குப் பின், எஸ்.ஐ., வளர்மதியை, அவர் தங்கி இருக்கும் அறைக்கு, பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு, மீண்டும், மறுநாள் காலையில் வந்து, பூபதி, "பிக்-அப்' செய்து வருவதாகவும், சக போலீசார் புலம்பி வந்தனர். எஸ்.ஐ., வளர்மதிக்கு வழங்க, வீட்டில் இருந்து, தினமும் சாப்பாடு எடுத்து வரச் சொல்லி, சிறப்பு எஸ்.ஐ., பூபதி, தன் மனைவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதனால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், சிறப்பு எஸ்.ஐ.,யின் மனைவி, தற்கொலைக்கு முயன்று, அவரை, அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி உள்ளனர். இப்பிரச்னை, எஸ்.பி.,யின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் எதிரொலியாக, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜு, தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறப்பு எஸ்.ஐ., பூபதி, எஸ்.ஐ., வளர்மதி ஆகிய இருவரும், ஜோடிபோட்டு வலம் வந்ததும், அதற்காக, பூபதி மனைவியைத் துன்புறுத்தியதும் தெரிய வந்தது.
அதையடுத்து, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு எஸ்.ஐ., பூபதி, எஸ்.ஐ., வளர்மதி ஆகிய இருவரும், அதிரடியாக, மாவட்ட ஆயுதப் படைக்கு, நேற்று தூக்கியடிக்கப்பட்டனர். தொடர்ந்து, எஸ்.ஐ., வளர்மதியை, வேறு மாவட்டத்துக்கு மாற்ற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.