சேலம்: சேலம், மணியனூர், பாரதி நகரில், சுடுகாட்டு பிரச்சனை காரணமாக, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பிணத்தை புதைக்க முடியாமல், ஆறு மணி நேரத்துக்கும் மேலாக உறவினர்கள், பிணத்துடன் ரோட்டில் போராட்டம் நடத்தினர். மோதல் அபாயத்தால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டி.ஆர்.ஓ., பேச்சு வார்த்தைக்குப் பின், உடல் அடக்கம் செய்யப்பட்டது. சேலம், பாரதிநகரில், மூன்று ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் உள்ள, 50 சென்ட் இடத்தை, கல் உடைக்கும் தொழில் செய்து வரும், போயர் இன மக்கள், சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இடத்தின் அருகே அரசின் சார்பில் நடுநிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம், கட்டப்பட்டு உள்ளது. இதனால், சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கு, பாரதி நகர், கரட்டூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு புதைக்க வேண்டிய பிணங்களை, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள, அனைத்து சமூக மக்களும், பிணம் புதைக்கும் இடத்தில் புதைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், காந்தி நகர் மக்கள், தாங்கள் பாரம்பரியமாக பிணத்தை புதைக்கும் இடத்தில் தான் புதைப்போம் என, தெரிவித்து வந்தனர்.
இந்த பிரச்னை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அப்பகுதியில், நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம், காந்திநகரை சேர்ந்த வீராணன் என்பவர், இறந்து விட்டார். அதை அடுத்து நேற்று காலை, 11:00 மணிக்கு, அவர் பிணத்தை, பாரதி நகர் பள்ளி அருகே, சர்ச்øகுரிய இடத்தில் புதைப்பதற்கு எடுத்து வந்தனர்.
அதற்கு பாரதி நகர், கரட்டூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, 200க்கும் மேற்பட்டோர், சம்பந்த இடத்தில் கூடி விட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. நடு ரோட்டில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை அடுத்து, சட்டம் ஒழுங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆறு மணி நேரத்துக்கு மேலாக மாறி, மாறி பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. பிணத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மக்களிடம், டி.ஆர்.ஓ., பிரசன்ன வெங்கடேசன், நேற்று மாலை, 4:30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், பிணத்தை தற்காலிகமாக மணியனூர் சுடுகாட்டில் புதைப்பது எனவும், பின்னர் இருதரப்பினரையும் அழைத்து பேசி முடிவு காணவும் தீர்மானிக்கப்பட்டது. அதிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிணத்தை, உறவினர்கள் நான்கு பேர் மட்டும் எடுத்துச் சென்று, மணியனூர் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
எச்சரித்த உளவுத்துறை : சுடுகாட்டில் பிணம் புதைப்பது சம்பந்தமாக இருதரப்பினர் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் குறித்து, 2012 ஜனவரி, 15ம் தேதி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையின் பேரில், மாவட்ட வருவாய் துறையும், மாநகர போலீசாரும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், தற்போது சுடுகாட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.