சென்னை: வீடுகளுக்கு போலியாக பத்திரம் தயாரித்து, அதை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விற்று, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை, சூளைமேடு ஹை ரோடு, சித்ரா அவென்யு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு: சித்ரா அவென்யு அடுக்குமாடி குடியிருப்பில், 364 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த இடம், தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமானது. சித்ரா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர், கோவிந்தராஜ் மூலமாக, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து, பவர் பத்திரம் வாங்கி, வீடுகளை விற்று வருகிறார். இவை அனைத்தும் சி.எம்.டி.ஏ., விதிமுறைக்கு முரணாக கட்டப்பட்டது என, தெரியாமல், அவரது பேச்சை நம்பி வீடுகளை வாங்கி விட்டோம். இங்குள்ள வீடுகளுக்கு போலியாக பத்திரங்கள் தயார் செய்து, அதை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம், மோசடி செய்து விற்று வருகிறார். சில குடியிருப்புகளை அடமானமும் வைத்து, கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தால், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.