தர்மபுரி: தந்தையை புறக்கணித்த, பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அவரை, சஸ்பெண்ட் செய்து கல்வி துறை உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை அடுத்த கரகூரை சேர்ந்தவர் தனபால், 80. இவருக்கு கோவிந்தராஜ், முருகேசன், ரவி என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேரும், தனபாலுக்கு சுழற்சி முறையில் உணவு மற்றும் பணம் வழங்கி வந்தனர். பாலக்கோட்டை அடுத்த பொப்பிடி அரசு பள்ளியில் ரவி, ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன், தனபாலுக்கு, ரவி உணவு மற்றும் பணம் கொடுக்காமல் புறக்கணித்துள்ளார்.
இது குறித்து தனபால், மாரண்டஹள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் ரவியை கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து, ஆசிரியர் ரவியை, மாவட்ட கல்வி அதிகாரி கல்யாணசுந்தரம் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.