விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், விதிமீறல் காரணமாக, 11 ஆலைகளின் உரிமத்தை "சஸ்பெண்ட்' செய்துள்ளனர். மாவட்டத்தில் ஜனவரி துவக்கத்தில் நடந்த பட்டாசு விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் தலைமையில், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள், ஜன., 18 முதல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 46 ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டதில், விதிமுறை மீறல் அதிகம் உள்ள, 11 ஆலைகளின் உரிமம், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளன. "35 ஆலைகளுக்கு உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது' எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.