தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ராகவன்,56, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, காந்திபுரம், மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன். சிவகங்கையில், கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றிய இவர், சமீபத்தில, திருச்செந்தூர் சரக கூட்டுறவு சார்பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் கட்டுபாட்டில் வரும், நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி நகர கூட்டுறவு வங்கியில், தனி அலுவலராக பொறுப்பேற்றார். குடியரசு தின விடுமுறைக்கு மதுரை சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் பணிக்கு வந்தார். நாசரேத்தில், வாடகை வீட்டில் தங்கியிருந்த ராகவன், நேற்றுகாலை, 10 மணிவரை அலுவலகத்திற்கு பணிக்கு வரவில்லை. இதனால், ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, அங்கு, ராகவன், கேபிள் வயரில், தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அவரது உடலை, நாசரேத் போலீசார் மீட்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.