திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே சிறுவர்களை கடத்தி சென்ற, ஈரோடு போர்வெல் உரிமையாளரை போலீஸார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி மகன் சுரேஷ்,15, கீழ் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கீழ்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் விக்னேஷ்,16, இவர் பள்ளிக்கு செல்லாமல் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள போர்வெல் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார்.
பொங்கல் பண்டிகை விடுமுறையில் விக்னேஷ் கீழ்கல்பட்டு கிராமத்துக்கு வந்தார். அதன்பின் மீண்டும் விக்னேஷ் வேலைக்கு செல்லவில்லை. இதனால், பெருந்துறையில் உள்ள போர்வெல் உரிமையாளர் சர்மா, 26, காரில் கீழ்கல்பட்டு கிராமத்துக்கு நேற்று முன்தினம் விக்னேஷை தேடி வந்தார். கிராமத்தில் விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் பேசி கொண்டிருந்ததை கண்ட சர்மா, "ஏன்? வேலைக்கு வரவில்லை' என, விக்னேஷிடம் கேட்டார். "உரிய சம்பளம் தராததால் தான் வேலைக்கு வரவில்லை' என, விக்னேஷ் கூறினார். ஆத்திரமடைந்த சர்மா, என்னிடம் தகராறு செய்கிறாய்? என கேட்டு விக்னேஷையும், சுரேஷையும் காரில் தூக்கி போட்டு கடத்த முயன்றார். இதனால், சிறுவர்கள் இருவரும் கூச்சல் போட்டனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மணி, குப்பன் ஆகியோர் ஓடிவந்து மகன்களை மீட்க முயன்றனர். அதற்குள் சர்மா வேகமாக காரை எடுத்து சென்று விட்டார். இது குறித்து கண்ணமங்கலம் போலீஸார் விசாரித்து, வேலூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த சிறுவர்களை மீட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து சர்மாவை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.