சேலம்: நெல்லையை சேர்ந்த இளம் பெண், சேலத்தில் உள்ள காதலன் வீட்டு முன், நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரெயின்போ காலனியை சேர்ந்தவர் தங்கராஜ்பாண்டியன். இவரின் மகள் அமுதா,24, சென்னையில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில், சேலம் அத்வைத ஆஸ்ரம ரோட்டை சேர்ந்த ஜீவானந்தம்,25, என்பவரும் வேலை செய்துள்ளார். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்த நிலையில், காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அமுதாவை, சேலம் வரும் படி ஜீவானந்தம் கூறி உள்ளார். அவரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, அவர் நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் ஜீவானந்தத்தின் மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட போது, ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அமுதா, அத்வைத ஆஸ்ரம ரோட்டில் உள்ள ஜீவானந்தத்தின் வீட்டை கண்டறிந்தார். அங்கு வந்த அவர் வீடு பூட்டப்பட்டு இருந்ததை அடுத்து வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பேர்லேன்ட்ஸ் போலீஸார் அவரை காப்பகத்தில் தங்க வைத்தனர்.
நேற்று அவர் அளித்த தகவலின் பேரில் ஜீவனந்தத்தை தேடும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.