நெல்லிக்குப்பம்: செக்போஸ்ட்டில் குடிபோதையில் பணியாற்றிய ஏட்டு "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பெண்ணையாறு அருகே புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வருவதை தடுக்க செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 21ம் தேதி இரவு பணியில் இருந்த நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டுகள் பாலகுமார், 37, கோபிநாதன் 42, ஆகியோர், பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தியபோது அவர்கள் நிறுத்தாததால் ஆத்திரமடைந்து லத்தியை பைக் மீது வீசினர். பைக்கில் சென்றவர்கள் சற்று நேரத்தில் பத்து பேருடன் வந்து ஏட்டுகள் பாலகுமார், கோபிநாதனை தாக்கினர். இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி நடத்திய விசாரணையில் ஏட்டு பாலகுமார் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. துறை ரீதியான விசாரணையைத் தொடர்ந்து ஏட்டு பாலகுமாரை எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.