திருநெல்வேலி: நெல்லை அருகே துப்பாக்கியுடன் திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு துவங்கி முண்டந்துறை வரையிலும் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மான்கள், மிளாக்கள் உள்ளதால் அவற்றை வேட்டையாட அடிக்கடி துப்பாக்கி கும்பல்கள் வருகின்றன. கடந்த டிச.,23ம் தேதி, ஒரு போலீஸ் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி துப்பாக்கியோடு வேட்டையில் ஈடுபட்ட ஐந்துபேரை போலீசார் செய்தனர். அதில் தப்பிஓடிய இருவர் இன்னமும் சிக்கவில்லை, பிடிபட்ட துப்பாக்கி குறித்தும் துப்புதுலங்கவில்லை. இந்நிலையில் மீனவன்குளம், வனப்பகுதியில் ஒருவர் துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று துப்பாக்கியுடன் திரிந்த, நாகர்கோவில் அரசன்குளத்தை சேர்ந்த ஜெகன், 30, என்பவரை பிடித்தனர். விசாரணையில் அவர், மீனவன்குளத்தில் மூலிகை சிகிச்சைக்காக ஆசிரமம் நடத்திவரும் பாபா சாமியார் என்பவரிடம் உதவியாளராக இருப்பதாகவும் அவர் வைத்திருந்தது போலீஸ் அனுமதி தேவையில்லாத ஏர்கன் வகையை சேர்ந்த துப்பாக்கி எனவும் தெரியவந்தது. எனவே அவர் மீது வழக்கு போடாமல் போலீசார் கண்டித்து அனுப்பிவைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.