பந்தலூர்: பந்தலூர் அருகே, மர்மமான முறையில் சிறுத்தை இறந்து கிடந்தது. இது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் சேரங்கோடு டான்டீ சரக எண்-1க்கு உட்பட்ட மயானம் பகுதியில், நேற்று மதியம் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் காளைராஜன் தலைமையில், வனத்துறையினர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அதில், இறந்தது நான்கு வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. எனினும், இறந்ததற்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் ஆவின் கால்நடை டாக்டர் பிரபாகரன், சிறுத்தை உடலை பிரேத பரிசோதனை செய்தார். நல்ல நிலையில் உள்ள சிறுத்தை, விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.