திருப்பூர்: பத்தாம் வகுப்பு படிக்கும் மகள், பலமுறை சொல்லியும், "டிவி' பார்ப்பதை நிறுத்தவில்லையே என்ற வேதனையில், திருப்பூரில் தாய் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் குப்புசாமிபுரத்தை சேர்ந்தவர், யசோதா, 38. இவருக்கு, ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 15 ஆண்டுகளாக யசோதா, தன் அண்ணன் சரவணன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். யசோதா மகள், அவிநாசியில் உள்ள ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். அவர், படிப்பில் நாட்டம் செலுத்தாமல், எந்நேரமும், "டிவி' பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை தாய் யசோதா கண்டித்துள்ளார். அடிக்கடி புத்திமதி கூறியும், மகள் திருந்தவில்லையே என, மனமுடைந்த யசோதா, விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளின், "டிவி' மோகம், தாய் உயிரை குடித்த சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.