பந்தலூர்: பந்தலூர் அருகே அம்மங்காவு பகுதியில், பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்; அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அம்மங்காவு பந்தகாப்பு என்ற இடத்தில், பெற்றோருடன், 15 வயது பழங்குடியின சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டுக்கு அருகேயுள்ள வனப்பகுதிக்கு, சிறுமி தனியாக சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த சேத்தன், 40, என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமி, வீட்டுக்கு வந்து, நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல், மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர், அவரை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் நடந்த விசாரணையில், வனப்பகுதியில் அவரை, சேத்தன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அம்பலமூலா போலீசார், சேத்தன் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.