சென்னை: காதலிக்க மறுத்ததால், "ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, கண்களை பறிகொடுத்த வினோதினி, மேல்சிகிச்சைக்காக, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரைக்காலை சேர்ந்த, பொறியாளர் வினோதினி, 27, தம்மை ஒரு தலைபட்சமாக காதலித்த சுரேஷ் என்பவரால், ஆசிட் வீச்சுக்கு ஆளானார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த இக்கோர சம்பவத்தில், இரு கண்களையும் இழந்த வினோதினிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், முககாயத்தை ஆற்ற, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், வினோதினி அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேலாக, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், முக சீரமைப்பு சிகிச்சைக்காக, வினோதினி நேற்று, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு கண்களையும் பறிகொடுத்து, எதிர்காலத்தை இழந்து நிற்கும் தங்கள் மகளுக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, வினோதினியின் பெற்றோர், கோரி உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.