கோத்தகிரி: பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார்; மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக்கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், கோத்தகிரி - ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு பாக்கிய நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமியின் மகள் பிரமீளா, 15. பெற்றோருக்குள் ஏற்பட்ட பிரச்னையால் தந்தையை பிரிந்து, அத்தை சரஸ்வதி பராமரிப்பில் இருந்துள்ளார். விடுதியில் தங்கி, சாம்ராஜ் பள்ளியில் பிரமீளா 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், விடுதி காப்பாளரிடம், "வீட்டுக்கு சென்று வருகிறேன்' எனக்கூறி விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நான்கு பேர், பிரமீளாவின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. மனமுடைந்த பிரமீளா, பாக்கியா நகரில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்று, யாரும் இல்லாத நேரத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்காயத்துடன் அலறிய அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்øகாக கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, "பிரமீளாவின் மரணத்தில் மர்மம் உள்ளது; போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, உறவினர்கள் பாக்கியநகரில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், கோத்தகிரி-ஊட்டி சாலையில், 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் டி.எஸ்.பி., மாடசாமி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். "விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோத்தகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.