தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், பெண்ணிற்கு, அறுவை சிகிச்சை மூலம் பிறந்த பெண் குழந்தையை, ஆண் குழந்தை என, அவசரத்தில், நர்சுகள் மாற்றிக் கூறியதால், குழப்பம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கீழ ஈராலைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி மாரியம்மாவிற்கு, நேற்று , அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பிறந்தது.
காலை, 10:10 மணிக்கு, ஜெயக்குமாரை சந்தித்த நர்ஸ், மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதுகுறித்து, அலுவலக பதிவேட்டில் பதிவு செய்துவரும்படியும் கூறினார். அதன்படி, அவர் பதிவு செய்துள்ளார். 10:45 மணிக்கு, ஜெயக்குமாரை சந்தித்த மற்றொரு நர்ஸ், மனைவிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளதாவும், அதை பதிவு செய்யும்படியும் கூறினார். இந்த முரண்பட்டதகவலால் பிறந்தது, ஆணா? பெண்ணா? எனத்தெரியாமல் ஜெயக்குமார், குடும்பத்தினர் குழம்பிப்போயினர். அது குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜேந்திர பிரசாத்திடம் முறையிட்டனர். அவர், பிரசவத்தின் போது இருந்த மருத்துவர்கள், நர்சுகள், பணியாளர்களிடம் விசாரித்தார். அதில், மாரியம்மாவிற்கு, பெண் குழந்தைதான் பிறந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. அதை, அவர், ஜெயக்குமார், குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
அவசரத்தில் நர்சுகள், பணியாளர்கள் பிறந்த குழந்தை குறித்து, மாற்றிக் கூறிவிட்டதாக அவர்களை சமாதானப்படுத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.