சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே, போலீசில் புகார் கொடுக்கச் சென்ற வாலிபரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த, புவனகிரி ஒன்றிய ஜெ., பேரவை செயலரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். புவனகிரி ஒன்றிய ஜெ., பேரவை செயலர். இவரது மனைவி ராஜேஸ்வரி; மாவட்ட கவுன்சிலர். இளவரசன் வீட்டின் ஆடு, அதே கிராமத்தில் உள்ள சண்முகம் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, காய்கறிகளைத் தின்று சேதப்படுத்தியது. இதற்கு சண்முகம் மனைவி பாமா, ராஜேஸ்வரியிடம் நியாயம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி சேத்தியாத்தோப்பு போலீசில் கடந்த, 6ம் தேதி புகார் கொடுக்கச் சென்ற சண்முகத்தின் மகன் சரண்ராஜை, இளவரசன், ராஜேஸ்வரி மற்றும் சிலர் சேர்ந்து, அவரை வழிமறித்து ஆபாசமாகத் திட்டி, தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், சேத்தியத்தோப்பு போலீசார் ஜெ., பேரவை ஒன்றியச் செயலர் இளவரசன், மாவட்ட கவுன்சிலர் ராஜேஸ்வரி, இவர்களது மகன் ரவிச்சந்திரன் உட்பட, ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து, தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த இளவரசனை சேத்தியாத்தோப்பு சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் நேற்று கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மற்ற நான்கு பேரை தேடிவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.