கோவை: அதிக டீத்தூள் விற்பனை செய்து கொடுத்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக ஓய்வூதியர்களை ஏமாற்றி, சுமார் 15 லட்சம் பணம் பறித்த மோசடி நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
கோவை லட்சுமிபுரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, மூர்த்தி மற்றும் சக்திவேல் ஆகியோர் டீத்தூள் வியாபாரம் செய்து வந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களை இலக்காக வைத்து, டீத்தூள் விற்பனை செய்து தந்தால் அதிக பணம் தருவதாக விளம்பரம் செய்தனர்.
திட்டத்தில் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். ஓரளவு பணம் சேர்ந்ததும் மோசடி நபர்கள் தலைமறைவாகி விட்டனர். இது குறித்து கோவை போலீஸ் கமிஷனரிடம் ஓய்வூதியர்கள் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது : கோவை லட்சுமிபுரத்தில் "சுரபி டீ இந்தியா(பி) லிட்.,' எனும் நிறுவனத்தினர், "டீத்தூள் விற்பனை செய்ய பொறுப்பாளர் தேவை' என 2010ல் விளம்பரம் செய்தனர். அரசு ஊழியர் ஓய்வு பெற்ற சங்கத்தை அணுகி, "எங்கள் டீ நிறுவனத்தில் 75 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் ஷாப்பிங் பொறுப்பாளருக்கு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படும்' என கூறினர்.
டீத்தூள் விற்பனை கடை, விற்பனையாளர், கடை முன்பணம், வாடகை அனைத்தையும் கம்பெனியே ஏற்கும் என்றும், பொறுப்பாளரின் வீட்டின் அருகிலேயே கடை அமைத்து தரப்படும் என்றும் கூறியதை நம்பி, ஆளுக்கு 75 ஆயிரம் வீதம், சுமார் 20 பேர் முதலீடு செய்தோம்; இதே போல் தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களிடம் பணம் வசூலித்துள்ளனர்.
உறுதியளித்தது போல் கடை அமைத்து தந்தனர். விற்பனையாளரை நியமிக்காததால், டீத்தூள் விற்பனையாகவில்லை. தேக்கமடைந்த டீத்தூளை 2011 டிசம்பரில் எடுத்துச் சென்று விட்டனர். சம்பளம் தரவில்லை. கேட்டதற்கு பின் தேதியிட்ட காசோலைகளை தந்தனர். வங்கியில் பணமில்லாததால் காசோலைகள் திரும்பி விட்டன. போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மூன்று பேரில் சக்திவேல் இறந்து விட்டார். மீதமுள்ள சத்தியமூர்த்தி, மூர்த்தி ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.