Mother and daughter murdered | கழுத்தை நெரித்து தாய், மகள் கொலை - 70 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை : திருப்பூரில் பரபரப்பு | Dinamalar
Advertisement
கழுத்தை நெரித்து தாய், மகள் கொலை - 70 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை : திருப்பூரில் பரபரப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பூர்: திருப்பூரில், ஏற்றுமதி நிறுவன பெண் அதிகாரி மற்றும் அவரது தாயை கொலை செய்து, 70 பவுன் நகை, 2 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், 60 அடி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவர்மன். இவரது வீடு, பிச்சம்பாளையம் புதூரில் உள்ளது. வீட்டின் கீழ்தளத்தில் தனலட்சுமி, 43, வாடகைக்கு இருந்துள்ளார். ஏற்றுமதி பனியன் கம்பெனி நிறுவன அதிகாரியான தனலட்சுமி, கணவர் ராம்குமார் இறந்தபின், தாய் வசந்த கோகிலாவை,75, துணைக்கு தங்க வைத்துள்ளார். மேல்தளத்தில், பனியன் ஊழியர் சீனிவாசன், 42, குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று காலை, வெகுநேரமாகியும், தனலட்சுமி வீடு திறக்கப்படாததால்,மேல்தளத்தில் வசிக்கும் சீனிவாசனின் மனைவி கலா, வீட்டின் கதவை தட்டிப்பார்த்து விட்டு, ஜன்னல் வழியாக பார்த்தபோது, படுக்கை அறையில் தனலட்சுமி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து, அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பூட்டை உடைத்து, உள்ளே சென்று பாரத்தபோது, படுக்கை அறையில் தனலட்சுமியும், தாய் வசந்தகோகிலா, குளியலறையிலும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தனர். இருவரும் அணிந்திருந்த நகைகளை காணவில்லை; பீரோ உடைக்கப்பட்டு, 70 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
நகைக்காக நடந்த இரட்டை கொலை சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜன-201311:24:49 IST Report Abuse
IYAPPAN நகைய ரொம்ப போட்டு கல்யாண வீடுகளில் போய் பீதிகொள்வதொடு மட்டும் நிறுத்தி வங்கிகளில் பாதுகாப்பு பெட்டிகளில் வைத்து கொண்டேமேயானால் நமக்கு நல்லது நம் உயிருக்கு நல்லது.களவானி பயலுகளும்,கொலைகார பயலுகளையும் ஹீரோவாக்கி காண்பிக்கும் நம் தமிழ் சினிமா இருக்கும் வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Dr. Ganesh - Bangalore,இந்தியா
30-ஜன-201309:53:39 IST Report Abuse
Dr. Ganesh 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று படித்த ஒரு செய்தி - தமிழ் நாட்டில் இருந்த கொள்ளையர்கள் எல்லாம் வட நாட்டுக்கு சென்று விட்டார்கள் என்பது - யார் சொன்னால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
PALANI - Madurai,இந்தியா
30-ஜன-201308:47:49 IST Report Abuse
PALANI தமிழ்நாட்டில் கொள்ளை யார்கள இருக்க முடியாது .அம்மாவின் ஆட்சி தொடங்கியவுடன் தமிழ்நாட்டில் உள்ள கொள்ளையர்கள் அனைவரும் வடநாட்டுக்கு ஓடிவிட்டார்கள் என்று பேட்டி குடுத்து டோமே (நம் அம்மா )அப்புறம் எப்படி இந்த கொள்ளை சம்பவம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்