பொள்ளாச்சி: ஆனைமலையில், பேக்கரியில் புகுந்து ஊழியர்களை தாக்கி, பொருட்களை சூறையாடிய புகாரில், கவுன்சிலரையும், அவரது நண்பரையும் போலீசார் தேடிவருகின்றனர். கோவை மாவட்டம், ஆனைமலை பேரூராட்சி ஆறாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் மணி; இவரது நண்பர் முருகேசன். இருவரும், நேற்று ஆனைமலையில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. பேக்கரி கடை ஊழியர் வெற்றிச்செல்வன் பணம் தர மறுத்ததால், அவரை இருவரும் தாக்கினராம். தடுக்க முயன்ற மற்றொரு பணியாளர் திருமலைசாமி மற்றும் குமார் ஆகியோரையும், இவர்கள் அடித்து உதைத்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடிதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ஆனைமலை போலீசில் வெற்றிச்செல்வன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுன்சிலர் மணியையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.