அரையாண்டு தேர்வு, "நீண்ட' நாட்கள் நடந்ததால், பிளஸ் 2 மாணவர்களுக்கு ரேங்க் கார்டு தருவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, முழு பாடத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு, டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். இந்தாண்டு, டிச., 19ல், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாநிலம் முழுவதும் பொதுவான அரையாண்டு தேர்வு துவங்கியது. தமிழ், ஆங்கிலம் தேர்வு மட்டும், டிசம்பரில் நடந்தது. இயற்பியல், வேதியியில், கணிதம் உட்பட பிற பாடங்கள், ஜன., 2ல் துவங்கி, 10ம் தேதி முடிந்தது. அதன் பின் பொங்கல் விடுமுறை விடப்பட்டு, ஜன., 17ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்ட அளவில், பொது திருப்புதல் தேர்வுகள், ஜன., 20 முதல் நடக்கின்றன. பல பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தி, பொங்கல் விடுமுறைக்குள், மாணவர்களுக்கு தரப்பட்டது. அதேசமயம், பிற தேர்வு விடைத்தாள்கள், பொங்கல் விடுமுறைக்கு பின், சில பள்ளிகளில் தரப்பட்டது; சில பள்ளிகளில் இதுவரை தரவில்லை. இந்நிலையில், திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகின்றன. திருப்புதல் தேர்வு முடிந்தவுடன், பிப்., 4 முதல், செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. தொடர் தேர்வை காரணம் காட்டி, மாணவர்களின் அரையாண்டு தேர்வு விடைத்தாளும், ரேங்க் பட்டியலும் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களின் தேர்வு தரத்தை அறிய முடியாத நிலையில், மாணவர்கள் உள்ளனர்.
மாணவர்கள் சிலர் கூறியதாவது: தேர்வு எழுதிய உடன், விடைத்தாளை திருத்தி தந்தால், எங்களின் தரத்தை அறிய முடியும். விடைத்தாளில் செய்த தவறுகளை, அடுத்தடுத்த தேர்வுகளில் மாற்றி கொள்ள முடியும். அதேபோல் ரேங்க் கார்டு தந்தால், வகுப்பு, பள்ளியில் எந்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதை அறிய முடியும். தற்போது இதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "அரையாண்டு தேர்வு அட்டவணை காரணமாக, ரேங்க் கார்டு தர முடியாத நிலை ஏற்பட்டது. திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை திருத்தி தருவதில் சிரமம் உள்ளது. இருந்த போதும், விடைத்தாள்களை திருத்தி தரவும், ரேங்க் கார்டுகளை தருவதற்கும் முயற்சி செய்கிறோம்' என்றார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.