வேலூர்: "பேஸ் புக்' மூலம் காதலித்து, திருமணம் செய்வதாக கூறி, பெண்ணை ஏமாற்றிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் தேவிகா, 22. இவருக்கும், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், 28, என்பவருக்கும், பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. ஓராண்டு இருவரும், பேஸ் புக் மூலம் பேசி கொண்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம், ராணிப்பேட்டையில் இருவரும் சந்தித்துப் பேசினர்; சந்திப்பு தொடர்ந்தது. டிச., 13ம் தேதி, அங்குள்ள ஒரு ஓட்டலில் இவர்கள் தங்கினர். அப்போது, "உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன்' என, சத்தியம் செய்து, தேவிகாவை உல்லாசத்துக்கு அழைத்தார் சதீஷ்குமார். தேவிகா மறுக்கவே, தயாராக வைத்திருந்த மஞ்சள் கயிற்றை, தேவிகா கழுத்தில் கட்டினார். இதை நம்பிய தேவிகா, அவருடன் உல்லாசமாக இருந்தார். இதையடுத்து இவர்கள், சென்னை, பெங்களூரு சென்று, பல முறை உல்லாசமாக இருந்தனர். ஜனவரி முதல், தேவிகாவுடன் தொடர்பு கொள்வதை, சதீஷ்குமார் நிறுத்தினார். இதுகுறித்து, ராணிப்பேட்டை மகளிர் போலீசில், தேவிகா புகார் செய்தார். போலீசார் விசாரித்து, சதீஷ்குமாரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.