சென்னை:
கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்தை, தியேட்டர்களில் திரையிட மாவட்ட
கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவிற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது.
மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் நிறுத்தி
வைத்துள்ளது.
"விஸ்வரூபம்' படத்தை, தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில்
திரையிட, மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்துள்ளனர். இந்த தடையை எதிர்த்து
சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மனு தாக்கல்
செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு
வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு
சார்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட்-ஜெனரல்
அரவிந்த் பாண்டியன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
வில்சன், மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு
ஆகியோர் வாதாடினர். காலை, 11:00 மணிக்கு துவங்கிய வழக்கறிஞர்களின் வாதம்,
மாலை 6:00 மணிக்கு முடிந்தது. இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணி அளவில்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த
உத்தரவு: இந்த வழக்கின் ஒட்டு மொத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு, 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு
நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
மேலும், இப்படத்தை வெளியிடும் மனுதாரரின் உரிமையில் குறுக்கிட அரசுக்கு
தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் ஆரம்ப முகாந்திரம் உள்ளதால், இந்த
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்தபின்,
சட்டப்படி தகுதி அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இப்படத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்தவர்கள், "சினி மோட்டே கிராப்' சட்டத்தின் கீழ்
நியமிக்கப்பட்ட உரிய அமைப்பில் மனு தாக்கல் செய்யலாம், அதற்கு இந்த உத்தரவு
தடையாக இருக்காது. இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை இன்று காலை வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடுதல்
அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார். ஆனால், அதை நீதிபதி
எற்கவில்லை. இந்த வழக்கு விசாரணையையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் நேற்று
போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஐ கோர்ட்
பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதையொட்டி, இந்த மனு மீதான விசாரணை, இன்று நடைபெறும் என தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.