ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளக்காதலியை எரித்து கொலை செய்த காதலனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஸ்ரீவி.,ல் உள்ள மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் ராஜமாடத்தி. இவரது கணவர் வீராச்சாமி. இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ராஜமாடத்தி, மகன் செல்வகுமாருடன், தனியாக வசித்தார். வீராசாமி பாண்டியன் என்பவருடன், கள்ள தொடர்பு ஏற்பட்டது. 2008 நவ., 20ம் தேதி இரவு 11 மணிக்கு, உறவு கொள்ள ராஜமாடத்தியை அழைத்தார். அவர் மறுத்தார். ஆத்திரமடைந்த வீராசாமி பாண்டியன், மண்ணெண்யை அவரது உடலில் ஊற்றி, தீ வைத்து விட்டு தப்பினார். படுகாயமடைந்த ராஜமாடத்தி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார்.
இவ்வழக்கு ஸ்ரீவி.,யில் உள்ள மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி கிருஷ்ண மூர்த்தி, கள்ளக்காதலியை எரித்து கொலை செய்த வீராசாமி பாண்டியனுக்கு, ஆயுள் தண்டனை, 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.