திருவள்ளூர்: முதல்வர் ஜெயலலிதா பற்றி, அவதூறு, பேசியதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, பிப்., 27ல் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில், கடந்த ஆண்டு ஆக., 29ல் தே.மு.தி.க., பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கட்சி தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர், முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக, பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அரசு வக்கீல் ராம்குமார், திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், விஜயகாந்த் மீது, நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன், இவ்வழக்கு தொடர்பாக, விஜயகாந்த் பிப்.,27 ல், நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.