மதுரை: கும்பகோணம் அருகே அரசுப்பள்ளியில் கண்டித்ததால், மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மீதான வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. கும்பகோணம் நீரேத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி. இவர், பள்ளி அலுவலகத்தில் உள்ள பையை வேறு இடத்தில் மாற்றி வைக்குமாறு மாணவி சூர்யா,14,விடம் தெரிவித்துள்ளார். பின், பையிலிருந்த 500 ரூபாயை காணவில்லை என்பதால், சூர்யா எடுத்திருக்கலாம் எனக் கருதி விஜயலட்சுமி கண்டித்துள்ளார். மனம் உடைந்த சூர்யா 2011 பிப்ரவரியில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். விஜயலட்சுமி மீது போலீசார், "தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக,' வழக்குப்பதிவு செய்தனர்.
விஜயலட்சுமி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ""மாணவி தற்கொலைக்கு காரணமல்ல. மற்ற ஆசிரியர்கள் போல் அறிவுரைகள் தான் கூறினேன். சூர்யாவின் தாய்க்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என தெரிவித்தார்.
நீதிபதி டி.சுதந்திரம் உத்தரவில், ""மாணவி உண்மையில் திருடினாரா அல்லது திருடியதாக தவறாக மனுதாரர் கருதிவிட்டாரா? என எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. சந்தேகத்தின் பேரில், பிற மாணவர்கள் முன் சூர்யாவை மனுதாரர்,"திருடுவதற்கு பதில் சாகலாம்,' என கண்டித்துள்ளார்.
மனுதாரர், மனதளவில் அப்படி கூறியிருக்க வாய்ப்பில்லை. வார்த்தைகளை பயன்படுத்துவதில் கவனம் தேவை. கோபத்தில் கடும் வார்த்தைகள் வருவதுண்டு. இப்படி, நம்மை கண்டித்துவிட்டாரே எனக்கருதி, அவர் கூறிய வார்த்தைகள்படி (தற்கொலை) செய்திருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே, விழுப்புரம் வழக்கு ஒன்றில் ஐகோர்ட்," அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நலனை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களது வார்த்தைகள், மாணவர்கள் எந்த தவறான செயல்களிலும் ஈடுபட தூண்டும் வகையில் இருக்கக்கூடாது. நல்ல பழக்க, வழக்கங்களை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், மனுதாரர் தவறு செய்ததாக கருத முடியாது. அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.