சென்னை: "கூட்டுறவு சங்கங்களில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்க, பொதுக்குழுவுக்கு அதிகாரம் வழங்கி, தமிழக அரசு கொண்டு வந்த, சட்டத்திருத்தம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில், பல ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. சங்கங்களை நிர்வகிக்க, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம், அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில், உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள, இந்த தனி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. தனி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, ஐகோர்ட் ரத்து செய்தது. இதனால், கடந்த, 11, ஆண்டுகளாக, கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடியவில்லை. இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்க, பொதுக்குழுவுக்கு அதிகாரம் வழங்கி, கடந்த ஆண்டு நவம்பரில், அவசர சட்டம் மூலம், சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பின், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, சட்டம் ஆனது.
இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், 50க்கும் மேற்பட்ட மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன.
"தேர்தல் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட போர்டு தான் உறுப்பினர்களைச் சேர்க்க முடியும்; பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை; இந்த சட்டத்திருத்தம் செல்லாது; பழைய உறுப்பினர்களை கொண்டு, தேர்தல் நடத்த வேண்டும்' என, மனுக்களில் கூறப்பட்டது.
மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம், கூட்டுறவு சங்கங்களின் விதிகளை, பலவீனப்படுத்துவதாக இல்லை. ஜனநாயக ரீதியான கட்டுப்பாடு உடைய, கூட்டுறவு சங்கங்களின் சுதந்திரத்தில், குறுக்கிடுவதாகவும் இல்லை. மேலும், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த பல உத்தரவுகளுக்கு எதிராகவும், இந்த சட்டத்திருத்தம் இல்லை. எனவே, மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லும். இது, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.