Consumer court orders pepsi to give compenstion to consumer | கெட்டுப்போன குளிர்பானம் வினியோகம் : நஷ்டஈடு வழங்க பெப்சி நிறுவனத்திற்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கெட்டுப்போன குளிர்பானம் வினியோகம் : நஷ்டஈடு வழங்க பெப்சி நிறுவனத்திற்கு உத்தரவு

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: கெட்டுப்போன குளிர்பானத்தை வினியோகம் செய்ததால், பாதிக்கப்பட்ட விற்பனையாளருக்கு, நஷ்டஈடு வழங்க, "பெப்சி கோ இந்தியா ஹோல்டிங்ஸ்' நிறுவனத்திற்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பாரிமுனை, சங்குராம செட்டி தெருவில், குளிர்பான விற்பனை கடை வைத்திருப்பவர் ரஷீத். இவர், 2011ம் ஆண்டு, பிப்ரவரி, 5ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில் உள்ள, "பெப்சி கோ இந்தியா ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் முகவரான, "எஸ்.எம். ஏஜென்சிஸ்' இடமிருந்து, 200 மி.லி., "மிராண்டா' குளிர்பான பாட்டில்களை, 2.5 பெட்டிகள் வாங்கி உள்ளார். அவற்றில், ஒரு பாட்டிலில் இருந்த குளிர்பானம், தூசுடன் கெட்டுப்போய் இருந்தது, வாடிக்கையாளர் மூலம், ரஷீதுக்கு தெரிய வந்தது. கெட்டுப்போன குளிர்பானத்தை வினியோகம் செய்ததற்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு, "பெப்சி கோ இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவன மேலாளர் மற்றும் அதன் முகவருக்கு எதிராக, ரஷீது, நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த சென்னை(வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு: "குறிப்பிட்ட பாட்டிலில் இருந்த குளிர்பானம், பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல' என, பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன குளிர்பானத்தை வினியோகித்ததால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, சம்பந்தப்பட்ட குளிர்பான தயாரிப்பு நிறுவனம், 15 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவாக, 2,000 ரூபாயும் தர வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை