மதுரை: திண்டுக்கல்லில் லாரியை ஓட்டிச்சென்றவருடன், பயணம் செய்தவர் விபத்தில் பலியானதற்கு, இன்சூரன்ஸ் கம்பெனி 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பாய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.
திண்டுக்கல் சுப்பிரமணி. இவர் 2008 ஜூன் 6 ல் லாரியை ஓட்டிச் சென்றார். உடன் பெரியசாமி பயணம் செய்தார். லாரி விபத்திற்குள்ளானதில் பெரியசாமி இறந்தார். பெரியசாமி குடும்பத்தை சேர்ந்த விஜயலட்சுமி உட்பட 5 பேர், இழப்பீடு கோரி திண்டுக்கல் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனு செய்தனர். தீர்ப்பாயம்," திண்டுக்கல் நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதை, சுப்பிரமணியத்திடம் வசூலித்துக்கொள்ளலாம்,' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, இன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட மேலாளர், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி பி.தேவதாஸ்: லாரியை ஓட்டிய சுப்பிரமணி, கனரக வாகனம் ஓட்டும் உரிமம் பெறவில்லை. அவர் இலகுரக வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் லாரி ஓட்டியது தவறுதான். அவரது தவறால், பெரியசாமியின் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது. பெரியசாமி இறக்கும்போது 32 வயது. அவர் எஸ்.டி.டி., பூத் நடத்தி, மாதம் 5000 ரூபாய் சம்பாதித்துள்ளார். தீர்ப்பாய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.