தேனி: தேனி மாவட்டத்தில், அடகு நிறுவனங்களிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில், தங்க நகை அடகு பிடிக்கும் 7 நிறுவனங்கள், தங்களது 75 கிளைகளை கடந்த டிசம்பரில் மூடின. இந்நிறுவனங்கள், 80 ஆயிரம் பேரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடகு வாங்கி, அவற்றை பெரிய நிறுவனங்களில் கூடுதல் தொகைக்கு மறுஅடகு வைத்து, மோசடியில் ஈடுபட்டன.
தேனி குற்றப்பிரிவு போலீசார், தேனி ஜூடியசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் உத்தரவு பெற்று, மூடப்பட்ட நிறுவனங்கள், மறு அடகு வாங்கிய நிறுவனங்களில் இருந்த பொதுமக்களின் நகைகளை மீட்டனர். இதற்காக, 65 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நகைகளை மீட்டு, மதிப்பீடு செய்து, ஆவணங்களை தயார் செய்து, தேனி கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, பொதுமக்களிடம் நகைகளை ஒப்படைப்பதற்கு, குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., உமா தலைமையில், தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தவிர, மூடப்பட்ட நிறுவனங்களின், 75 கிளைகளிலும் பணியாற்றிய ஊழியர்கள் போலீசிடம் வாக்குமூலம் அளித்து, அப்ரூவராக மாறி கணக்குகளை ஒப்படைத்துள்ளனர். இதனால், விரைவில் நகைகள் மக்களுக்கு கிடைக்கும், என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.