மத்திய அரசின் விதிப்படி, டிஜிட்டல் மயம் செய்யாமல், சென்னை மாநகரில், "டிவி' சேனல் ஒளிபரப்பு செய்ய, தமிழக அரசு கேபிள் "டிவி'க்கு தடை விதிக்க வலியுறுத்தி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு தகராறு சமரசம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள, இவ்வழக்கு விசாரணை, பிப்., 4ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒளிபரப்புத் துறை, சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி ஆகிய மாநகரங்களில், "டிவி' சேனைல் ஒளிபரப்பை டிஜிட்டல் மயமப்படுத்தி ஒளிபரப்ப, கடந்த ஆண்டு, டிச., 31ம் தேதியை இறுதித் தேதியாக நிர்ணயித்தது.
இதற்குப் பின், டிஜிட்டல் மயம் செய்யாமல், "டிவி' சேனல்களை ஒளிபரப்ப தடையும் விதிக்கப்பட்டது. ஆனால், சென்னை மாநகரில், "டிவி' சேனல்கள் ஒளிபரப்ப, 40 சதவீத அளவில் தான், டிஜிட்டல் மயமாகியுள்ளது. சேனல்களை ஒளிபரப்ப, எம்.எஸ்.ஓ., துவங்கிய, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க, மத்திய அரசு மறுத்து விட்டது. இதனால்,கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு பெரும் பின்னடைவும் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், டிஜிட்டல் மயம் செய்யப்படாமலே, கட்டண சேனல்கள் உள்பட அனைத்து சேனல்களும் சென்னையில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. மத்திய அரசின் விதியை மீறி, கேபிள் ஒளிபரப்பை தமிழக அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. மேலும், சென்னை மாநகரின் எல்லையில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்தும், டிஜிட்டல் மயமாக்கப்படாத ஒளிபரப்பை, அரசு கேபிள் நிறுவனம் அனுமதித்து வருகிறது. இவற்றுக்கு, தடை விதிக்க வேண்டும் என, தனியார் கேபிள் ஆபரேட்டர்கள், தொலைத் தொடர்ப்பு தகராறு சமரசம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, தீர்ப்பாய உறுப்பினர் ரஸ்தோகி முன்னிலையில் விசாரணைக்கு நேற்று வந்தது. அடுத்த கட்ட விசாரணை, பிப்., 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.