பெரியகுளம்:அரசு பஸ்களுக்கு, தனியார் பங்க்கில் டீசல், முறைகேடுகளை தடுக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து திண்டுக்கல் மண்டலத்தின் கட்டுப்பாட்டில், மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம் , குமுளி உட்பட 7 அரசு பணிமனைகள் உள்ளன. இவற்றில் 400 பஸ்கள் உள்ளன. மத்திய எண்ணெய் நிறுவனங்கள், கொள்முதல் டீசல் விலையை உயர்த்தியது. இதனால் அரசு பஸ்கள், தனியார் பங்க்கில் ஒரு லிட்டர் டீசல் 51.55 ரூபாய்கு நிரப்புகின்றனர்.
பணிமனையில் இருந்து, 100 மீட்டர் தூரம் கொண்ட பங்க்கில் டீசல் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெரியகுளம் டெப்போவில் 69 பஸ்களில் சுழற்சி முறையில் தினமும் 35 பஸ்களுக்கு, தினமும் 4000 லிட்டர் டீசல் நிரப்பப்படுகிறது.டீசல் நிரப்பும் போது, பணிமனை மேலாளர், டிரைவர், கண்டக்டர், டெப்போ பம்ப் ஆப்பரேட்டர், பராமரிப்பு மேலாளர் உட்பட 5 பேர் கொண்ட குழு, மேற்பார்வையில் நிரப்பவேண்டும். முறைகேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன் நடவடிக்கையாக, "உண்மை தான் என்ற விபர பதிவேட்டை' தினமும் ஐந்து பேர்கொண்டு குழு கையெழுத்திட்டு,அந்த படிவங்களை திண்டுக்கல் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.