theni district news | பென்னிகுவிக் சிலையைச் சுற்றிபாதுகாப்பு வளையம் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பென்னிகுவிக் சிலையைச் சுற்றிபாதுகாப்பு வளையம் அமைப்பு

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலூர்:பென்னிகுக் மணிமண்டபத்தில், அவரது சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக்கிற்கு, லோயர்கேம்பில் அரசு சார்பில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மணிமண்டபம் கட்டி இம்மாதம் 15ல் திறப்பு விழா காணப்பட்டது. மணிமண்டபத்தைக் காண, தினந்தோறும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் வந்தவண்ணம் உள்ளனர். மேலும், தேக்கடி, சுருளி அருவி என சுற்றுலா வரும், சுற்றுலா பயணிகளும் மணிமண்டபத்தை பார்ப்பதற்கு அதிக அளவில் வருகின்றனர். மணிமண்டபத்தின் மையப்பகுதியில் பென்னி குவிக் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சிலையைத் தொட்டு பார்ப்பதும், அதனருகில் நின்ற போட்டோ எடுப்பதும், சூடம் ஏந்திக் காட்டுவதுமாக இருந்தனர். இதனால், சிலை விரைவில் சேதமடையும் நிலையை எட்டியது. இந்நிலையில், சிலையை தொடாத வகையில், பொதுப்பணித்துறை சார்பில், சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X