அல்மாட்டி: கஜகஸ்தான் நாட்டில் அதிக பனி காரணமாக தனியாருக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 21 பேர் பலியாயினர். இது குறித்து அந்நாட்டின் அதிகாரி ஒருவர் கூறுகையில் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரின் அருகே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பனி காரணமாக விமானத்தில் பயணம் செய்த 16 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் பலியாயினர். அளவிற்கு அதிகமான பனி பொழிந்த காரணத்தால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விமானத்தில் தீ விபத்து மற்றும் வெடித்து சிதறியதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறினார்.மேலும் அல்மாட்டி நகர துணை மேயர் மவுலன் முகாஸேவ் கூறுகையில் முதல்கட்ட தகவலின் படி மோசமான வானிலை காரணமாக இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.